;
Athirady Tamil News

கைபேசிக்கு பணம் செலுத்த தடுமாறும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!!

0

பணம் செலுத்த முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் கைத்தெலைபேசி இணைப்பு நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கையடக்க தொலைபேசி இணைப்பு இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு காரணம் பணம் செலுத்தப்படாமையே என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்த பொதுமக்கள் உட்பட பலரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று (7-02) வியாழக்கிழமை மாலையில் இருந்து தொலைபேசி இயங்கத்தொடங்கியிருந்தது
இதன் பொது பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்ட ஊடகவியலாளர் உங்கள் தொலைபேசி இரண்டு நாட்களாக இயங்கவில்லையே என கேட்டபோது தொலைபேசிக்கு பணம் செலுத்தப்படவில்லை.

அதற்குரிய பணம் இல்லாமையால் செலுத்த முடியாதிருந்தது தற்போதுதான் பணத்தை கடனாக பெற்று செலுத்தியிருந்தேன் என தெரிவித்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 1 =

*