;
Athirady Tamil News

சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு!!

0

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

நாளை (09) இரவு 09.00 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 03.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி கொழும்பு 01, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதேநேரம் குறித்த காலப் பகுதியில் புறக்கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

இதுதவிர வீதி அபிவிருத்தி பணி காரணமாக சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*