;
Athirady Tamil News

வடமாகாண முதன்மை திட்டத்திற்கான பொருளாதார விருத்திக்கட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு!! (படங்கள்)

0

வடமாகாண முதன்மை திட்டத்திற்கான பொருளாதார விருத்திக்கட்டமைப்பு அறிக்கை இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்தியக் காரியாலயத்தினால் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் பிராந்தியக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மேற்படி வங்கியின் பிராந்திய முகாமையாளர் பா.சிவதீபன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகத்தின் வழிப்படுத்தலில்;வடக்கில் உள்ள துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு மத்திய வங்கியினால் பொறுப்புரிமை அளிக்கப்பட்ட அறிக்கையாக மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.

வடக்கில் நிலவும் போருக்கு பின்னரான சமூக பொருளாதார சவால்களை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் (கிளிநொச்சி) பா.சிவதீபன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினரால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியட்ட பின்னர் அறிக்கை தொட்பான விளக்கம் மேற்படி குழுவின் நிபுணர்களால் வழங்கப்பட்டதுடன் அறிக்கை தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் இந்தக் குழுவிற்கான ஆலாசனைகளும் பெறப்பட்டிருந்தன.

மேலும் குறித்த ஆய்வறிக்கை நிலையான பொருளாதார வளர்ச்சிப்பாதையை பரிந்துரைத்துள்ளதுடன் மக்கள் மற்றும் சமூகம் மீது முதலீட்டு அவர்களின் மீண்டெழும் ஆற்றலை மேம்படுத்துவது வடக்குக்கு பொருத்தமான தந்திரோபாயமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 6 =

*