;
Athirady Tamil News

முல்லைத்தீவு /உடையார்கட்டு மகா வித்தியாலயம், இல்லத் திறனாய்வுப் போட்டி 2019 நிகழ்வுகள்..!(படங்கள்)

0

முல்லைத்தீவு /உடையார்கட்டு மகா வித்தியாலயம், இல்லத் திறனாய்வுப் போட்டி 2019 நிகழ்வுகள்..!(படங்கள்)

முல்லைத்தீவு /உடையார்கட்டு மகாவித்தியாலயம் இல்லத் திறனாய்வுப் போட்டி 2019 நிகழ்வுகள் பிற்பகல் 01.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.ஶ்ரீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (பாராளுமன்ற உறுப்பினர் வன்னிமாவட்டம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.சு.ஜனமேஜயந்த் (உப தவிசாளர் புதுக்குடியிருப்பு) திரு.சி.குகநேசன் (பிரதேசசபை உறுப்பினர் புதுக்குடியிருப்பு) திருமதி உமாநிதி புவனராஜா (வலையக் கல்விப் பணிப்பாளர் வலையக்கல்விப் பணிமனை முல்லைத்தீவு) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக திரு.சி.சுப்பிரமணியேஸ்வரன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் புதுக்குடியிருப்பு) திருமதி கண்மணி கிறுஸ்ரியன் (ஓய்வுநிலை ஆசிரியர்) திரு.சே.ஜெயராசா (மு.பா.அ.ச.செயலாளர்) திரு.சி.துருபரன் (பா.அ.ச.செயலாளர்) ஆகியோருடன் அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தம் பிள்ளைச் செல்வங்களுக்கு உற்சாகத்தை வழங்கினர்.

தவிர இடைவேளை நிகழ்வாக இசையும் அசைவும் நிகழ்வால் மைதானமே வண்ணமயமாக காட்சியளித்து விருந்தினர்கள் தங்களை மறந்து பார்த்து ரசித்ததை காணக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில் சர்வதேச தரத்திலான ஒரு திறனாய்வு நிகழ்வை பார்த்து மகிழ்ந்த அதே நேரம் இனிமையான மலரும் நினைவுகளோடு நாமும் விடைபெற்றோம்.

“அதிரடி”க்காக ✍யாழ் அகரன் மற்றும், படங்கள்:சயந்தன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − fourteen =

*