;
Athirady Tamil News

தமிழ் தேசியஎழுச்சி நாட்களில் யாழ்.மாநகரசபையின் எல்லைக்குள் களியாட்டம் தடை!!

0

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடாத்துவதை தடைசெய்யக் கோரும் பிரேரணைசபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபையின் மாதாந்தஅமர்வுஇன்றுகாலைநடைபெற்றது. இதன் போதுதமிழ் தேசியமக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணைஒன்றைசமர்ப்பித்திருந்தார்.
யாழ்.மாநகரசபைக்குஉட்பட்டபகுதிகளில் தமிழ் தேசியஎழுச்சிநாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்டநிகழ்வுகள் மற்றும் கேலிக்கைவிழாக்களைநடத்துவதைதடைசெய்யவேண்டும்.

குறிப்பாகதமிழ் இன அழிப்புநாளானமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்,தியாகதீபன் திலீபனின் ஆரம்ப இறுதிநாள் மற்றும் தமிழீழவிடுதலைப் புலிகளின் மாவீரர் வாரர் வாரத்த்தில் இவ்வாறானகளியாட்ட,கேலிக்கைநிகழ்வுகளைதடைசெய்யவேண்டும். அவ்வாறானநிகழ்வுகள் நடாத்தப்படுவதற்குமாநகர சபை அனுமதிவழங்கக் கூடாது.

மேலும் சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடைசெய்யவேண்டும் என்றபிரேரணையைபார்த்தீபன் சபையில் சமர்ப்பித்திருந்தார்.
குறிப்பாகயாழில் இராணுவத்தினால் நடத்தப்பட்டநிகழ்வொன்றில் மதுபானபோத்லினைவெற்றி இலக்காககொண்டுநடத்தப்பட்டநிகழ்வினையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.

இப் பிரேரணைமீதானவாதங்கள் நடைபெற்றது. இதன் போதுஈ.பி.டி.பியின் உறுப்பினர் மு.ரெமிடியஸ் அப் பிரேரணையில் முதல் போராளியானசிவகுமாரின் உயிரிழந்தயூன் 5 ஆம் திகதியிலும் இவ்வாறானகேலிக்கைநிகழ்வுகள் நடத்துவதற்குதடைவிதிக்கவேண்டும் என்றுகோரியிருந்தார்.

மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்குதடைவிதிக்கமுடியாதுஎன்றுதெரிவித்துமாவிரர் வாரத்தில் 26, 27 ஆம் திகதிகளில் கேலிக்கைநிகழ்வுகளுக்குதடைவிதிக்கலாம் என்றயாழ்.முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் திருத்தத்துடன் குறித்தபிரேரணைஏகமனதாகநிறைவேற்றப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 13 =

*