;
Athirady Tamil News

புங்குடுதீவில் “சூழகம்” அமைப்பினரால், பொருத்தப்பட்ட மின்விளக்குகள்..! (படங்கள்)

0

புங்குடுதீவில் சூழகம் அமைப்பினரால் பொருத்தப்பட்ட மின்விளக்குகள்..! (படங்கள்)

கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019 ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம்) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன .

புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி, கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி, உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும், மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன. மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன .

நிதியுதவியை வழங்கிய திரு.புவிவேந்தன் அவர்களுக்கும், மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் & படங்கள்…. #சூழகம்_Soozhagam

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − eight =

*