;
Athirady Tamil News

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி இல்லத்திறனாய்வுப்போட்டி நிகழ்வுகள்..! (படங்கள்)

0

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி இல்லத்திறனாய்வுப்போட்டி நிகழ்வுகள்..! (படங்கள்)

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி இல்லத்திறனாய்வுப்போட்டி நிகழ்வுகள் 08/02/2019வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு.சி.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு சு.சுரேன்(தவிசாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.குகானந்தராஜா (கோட்டக்கல்வி அலுவலர் பளை) திரு.ம.காந்தச்செல்வன் (உதவிக் கல்விப் பணிப்பாளர் கிளிநொச்சி) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக திரு.P.தயாபரன் (ஆசிரியர் யாழ்/ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்) திரு.சி.போல்ராஜ் (விளையாட்டு உத்தியோகத்தர் பிரதேச செயலகம்) திரு.சி.கமலமோகன் (ஆசிரியர் யாழ் /அருணோதயாக் கல்லூரி) அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தம் பிள்ளைச் செல்வங்களுக்கு உற்சாகத்தை வழங்கினர்.

தவிர இடைவேளை நிகழ்வாக இசையும் அசைவும் நிகழ்வுகள் எல்லோரையும் கவரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. மற்றும் பலத்தை நிரூபிக்க மாணவர்களின் கயிறுழுத்தல் விறுவிறுப்பாக அமைந்த அதேவேளை வினோத உடையில் மாணவர்கள் தத்ரூபமாக தங்களை இனங்காட்டி அனேகரின் நெஞ்சங்களில் நிறைந்து கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை காண கூடியதாக அமைந்தது.

“அதிரடி”க்காக ✍யாழ் அகரன் மற்றும் படங்கள்:மோகன்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*