;
Athirady Tamil News

வவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!

0

வவுனியாவில் 90 ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சென்ற 7 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு: வவுனியா பொலிசார் தீவிர விசாரணை

வவுனியா, சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடக்கவிருந்த 90 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கு சென்ற 7 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் இருந்து சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று மாலை வவுனியா, சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம், கற்குளம் படிவம் 3 பகுதிக்கு உறவினரின் தொண்ணூறாம் ஆண்டு நினைவஞ்சலிக்கான முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் தனது அப்பம்மாவுடன் சென்றிருந்ததார். அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்த நிலையில், இரவாகியதால் சிறுவனை காணாமையால் நீண்ட நேரமாக தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து இன்று காலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் குறித்த சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கிணற்றின் கட்டு 3அடி உயரமாக உள்ளதுடன், பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு ஆகும். இவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள் இது கொலை எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது கொலையா? அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?, தவறுதலாக நடந்ததா..? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + eleven =

*