;
Athirady Tamil News

கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஒருவர் கைது!!

0

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரியாத்துமுனை பிரதேசத்தில் கிண்ணியா-7 என்ற இடத்தின் ஜாவா வீதியில் டைனமைட் கொண்டு சென்ற ஒருவர் கைதாகியுள்ளார்.

திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய நபரிடமிருந்து 7 கிலோ 250 கிராம் டைனமைட்டும் 50 1/2 அடி சேவா நூலும் கைப்பற்றியதாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவின தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேகநபரையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + six =

*