;
Athirady Tamil News

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ் அணிகள் மோதல்..! (படங்கள்)

0

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்திய பலப்பரீட்சை; வேலணை வேங்கைகள் -ஜப்னா பன்தேர்ஸ் அணிகள் மோதல்..! (படங்கள்)

யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் ஜப்னா சுப்பர்லீக் ரி-௨௦ துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் வேலணை வேங்கைகள் மற்றும் ஜப்னா பன்தேர்ஸ் அணிகள் யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

நண்பகல் 12மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஜப்னா பன்தேர்ஸ் அணித்தலைவர் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதனடிப்படையில் துடுப்பாடக் களமிறங்கிய வேலணை வேங்கைகளின் முன்வரிசை வீரரக்ள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற ஒருகட்டத்தில் 4 பந்துப் பரிமாற்றங்களில் 4இலக்குகளை இழந்து 18ஓட்டங்கள் பெற்றிருந்தது.

மத்தியவரிசை வீரர்களான உத்தமன் மற்றும் சத்தியன் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் மூலம் ஓட்ட எண்ணிக்கை சடுதியாக உயர்ந்தது ஒருபுறம் உத்தமன் அதிரடி மூலம் அடித்தாட மறுமுனையில் சத்தியன் நிதானமாக ஓட்டங்களைச்சேர்த்தார்.

இறுதியாக 20ஓவர் முடிவில் 171 ஓட்டங்களைப் பெற்று வேலணை வேங்கைகள் ஜப்பனா பென்தேர்ஸ் அணிக்கு 172 வெற்றி இலக்காக தீர்மானித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா பன்தேர்ஸ் அணி வீரர்கள் அடித்தாட முற்பட்டு அடுத்தடுத்து இலக்குகளை இழந்து தடுமாறியது.

பின்வரிசை வீரர் பிரசன்னா வருகையின் பின்னர் ஓட்ட எண்ணிக்கை கூடிக் கொண்டு சென்றது ஒருகட்டத்தில் வெற்றி வாய்ப்பு ஐப்னாபன்தேர்ஸ் அணியின் பக்கம் திரும்பியது 6பந்துப் பரிமாற்றங்களிற்கு 12ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது.

சகல துறைகளிலும் பிரகாசித்த சத்தியன் மற்றும்உத்தமனின் பந்து வீச்சாலும் அணித்தலைவரின் களத்தடுப்பு வியூகத்தினாலும் 4ஓட்டங்களால் ஜப்னாபென்தேர்ஸ் அணியை வீழ்த்தி வேலணை வேங்கைகள் 2019ஆம் ஆண்டிற்கான J/S/L இன் சம்பியன்ஸ் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.

“அதிரடி”க்காக படங்கள் தகவல்.. ✍ யாழ்அகரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 4 =

*