;
Athirady Tamil News

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி இளைஞர் துவிச்சக்கர வண்டியில் சாதனை பயணம்!! (படங்கள்)

0

மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வளாகத்திலிருந்து தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்று (10) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையை சுற்றி 32 நாட்களில் 2125 கிலோமீற்றர் பயணிக்கவுள்ள பிராதபனின் பயணத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்த பிராதாபனை பாராளுமன்ற உறுப்பினர், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், எஸ்.காண்டீபன், மக்கள் சேவை மாமணி சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் நிறுவனர் கெ.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*