;
Athirady Tamil News

வவுனியாவில் மாட்டு இறைச்சி தீர்மானிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை!!

0

வவுனியா நகரிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் நகரசபையினரால் கேள்வி ரல் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொகையை விட 100ரூபா அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் கடந்த முறை இடம்பெற்ற சபை அமர்வின் போது கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கு சபையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் இன்று வரையில் அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை இதனால் மக்களுக்கு நகரசபையின் மேலுள்ள மதிப்பு குறைவடைந்து செல்கின்றதென வவுனியா இறம்பைக்குளம் வட்டார உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினருமான செந்தில் றூபன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக 10.2.2019 அவரிடம் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர் மற்றும் கோவில்குளம் பகுதியிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள் நகரசபையின் கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ளது. இதனை கேள்வி கோரல் மூலம் நகரசபையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டபோது ஒரு கிலோ தனி இறைச்சி 750ரூபாவிற்கும் எலும்புடன் இறைச்சி 650ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவேண்டும்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + nineteen =

*