;
Athirady Tamil News

வவுனியாவில் ‘மத சகவாழ்வு சமய நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு!! (படங்கள்)

0

கள்ளிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நந்திமித்திர கம கிராமத்தில் ‘மத சகவாழ்வு சமய நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்றுமாலை (10) நடைபெற்றது.

இந்நிகழ்வானது வவுனியா சர்வமதக்குழுவும், தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தார்கள்.
பல பிரதேசங்களிலிருந்து மக்களை குடியேற்றம் செய்துள்ள இக்கிராமத்தில் போதை ஒழிப்பு, சிறுவர்களுக்கான அறநெறி போதித்தல் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் சுயதொழில் பயிற்சிகள் வழங்குதல் போன்ற நவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கருத்துக்களை முன்வைத்த கிராமவாசிகள் தங்களுக்கு மதவழிபாட்டு தலங்கள் இல்லை என்றும் அதனை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் சிங்கள மொழி தெரிந்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் தங்கள் கிராமத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் சர்வமதப் தலைவர்களும், மக்கள் பொலிஸ் சேவை பொறுப்பதிகாரியும், தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளரும், கிராமத்து மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − one =

*