;
Athirady Tamil News

வரணி பகுதியில் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!!

0

வரணி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு உதவினார் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

வரணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு தகவல் வழங்கினார் என இளைஞர் ஒருவரை, ஊர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வீடு புகுந்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை தாக்கி மீசாலையில் இருந்து வரணி இயற்றாலை வரை அடித்து வீதி வீதியாக ” நான் திருடன் ” என கத்தி கத்தி நடக்குமாறு அடித்து சித்திரவதை புரிந்திருந்தனர்.

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை கடும் காயங்களுடன் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு இளைஞன் மாற்றப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் பொலிசார் வாக்கு மூலம் பெற்ற போது , தனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் நபர் ஒருவரின் தலைமையில் வந்த இளைஞர்களே தம் மீது தாக்குதல் நடாத்தினார். என வாக்கு மூலம் அளித்துள்ளார்.

குறித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொலிசார் , தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*