;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிலை செலுத்திய இருவர் மீது குளவி தாக்குதல்!! (படங்கள்)

0

அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிலில் பயனித்த இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் இந்த சம்பவம் 11.02.2019.திங்கள் கிழமை மாலை 04.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கிழ் தோட்டபகுதியில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு திடிர் என கலைந்து மோட்டார் சைக்கிலில் சென்ற இருவரை கடுமையாக தாக்கியூள்ளதாகவூம் குளவி கொட்டுக்கு இலக்கான இரண்டு பேரும் பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு காயங்களுக்கு உள்ளானவர்கள் குறித்து கவலை அடைய தேவையில்லை எனவூம் காயங்களுக்கு உள்ளான இருவரும் தொடர்ந்தம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஏ.எஸ்.கே ஜயசூரிய தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*