;
Athirady Tamil News

மகளைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!!

0

சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்கி தனது மக­ளைக் கொலை செய்த தந்­தைக்கு, அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றம் நேற்­றுத் தூக்­குத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

மூன்­றரை வய­தான தனது மகளை சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்தி கொலை செய்­த­தாக சுமத்­தப்­பட்ட குற்­ற ச்­சாட்­டில், குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த நப­ருக்­குத் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­ப ட்­டுள்­ளது.
பிர­தி­வா­திக்கு எதி­ராக முன்­வைக்­க ப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்க, முறைப்­பா ட்­டா­ளர்­க­ளுக்கு இய­லு­மாக இருக்­கின்­றது என்று, வழக்­கின் தீர்ப்பை அறி­வித்த வட மத்­திய மகாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மஹேஷ் வீர­மன் தெரி­வித்­துள்­ளார்.

அதற்­க­மைய கொலை செய்த குற்­றத்­துக்­கான தண்­ட­னை­யாக பிர­தி­வா­ திக்­குத் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி தெரி­வித்­துள்­ளார்.

தம்­புத்­தே­கம, ஹூரி­கஸ்­வெவ சம்­பத்­க­ம­வைச் சேர்ந்த காமினி என்­ற­ழைக்­கப்­ப­டும் இங்­கு­ரு­வத்த கெதர சேனா­ரத்ன என்­ப­வ­ருக்கே தூக்­கு­த் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்­றில் ஹூரி­கஸ்­வெவ சுதர்­ஷ­ன­கம சம்­பத்­க­ம­வில் சது­னிக்கா உபேக்ஸா லக்­மாலி என்ற சிறு­மியை பல்­வேறு சித்­தி­ர­வதை ­க­ளுக்கு உட்­ப­டுத்தி கொலை செய்­­தார் என்று சட்­டமா அதி­ப­ரால் பிர­தி­வா­திக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + fourteen =

*