;
Athirady Tamil News

டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி, மீட்புப் பணிகள் தீவிரம்..!!

0

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீவிபத்துக்கு 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − one =

*