;
Athirady Tamil News

சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு!!

0

சில பிரதேசங்களுக்கு நாளை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

நாளை காலை 08.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 05.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கெட்டாவ, பன்னிபிட்டிய, பெலவத்த, மத்தேகொட, ஹேமாகம, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + sixteen =

*