;
Athirady Tamil News

வலி.தென்மேற்கில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நா. உறுப்பினர் த.சித்தார்த்தன்!! (படங்கள்)

0

வலி.தென்மேற்கில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்.

மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சுதுமலை மற்றும் சாவல்கட்டு ஆகிய இடங்களில் மக்களுக்கும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தர்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று 11.02.2019 திங்கட்கிழமை மாலை 04 மணியளவில் மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சுதுமலை மற்றும் சாவல்கட்டு ஆகிய வட்டாரங்களில் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் மாதங்களில் குறித்த பகுதிகளில் இடம்பெறவுள்ள ஊர்எழுச்சி (கம்பரெலிய) அபிவிருத்தித்திட்டம் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியினூடாக இடம்பெறவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள், மற்றும் சமகால அரசியல் கருத்துக்கள் என்பன தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், மக்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை உறுப்பினர்களான பே.சுபாகர் (சுதுமலை), பா.நாகேந்திரம் (சாவல்கட்டு) மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்… “புளொட்” ஊடகப் பிரிவு…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − six =

*