;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 போலீசார் பலி..!!

0

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பேஹ்ரோ பகுதியில் இன்று போலீசார் ரோந்து வாகனத்தின்மீது புதர்களில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*