;
Athirady Tamil News

சேலம் அருகே தனியார் ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி..!!

0

பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை 5 கிரேன்களைக் கொண்டு தூக்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 8 =

*