;
Athirady Tamil News

யாழில் மாட்டினர் இரும்புத் திருடர், துணிவுடன் துரத்திப் பிடித்த வர்த்தகர்..!

0

யாழில் மாட்டினர் இரும்புத் திருடர், துணிவுடன் துரத்திப் பிடித்த வர்த்தகர்..!

யாழில் மாட்டினர் இரும்புத் திருடர், சம்பவம் பற்றி மேலும் அறிகையில் யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகருக்குச்சொந்தமான லட்ச ரூபாய் பெறுமதியான இரும்புகளை இன்றுகாலை 7.30 மணியளவில் மகேந்திரா படி(பட்டா) வாகனமொன்றில் ஏற்றிச் செல்வதை அவதானித்த வர்த்தகர் தனது உயர்ரக வாகனத்தில் துரத்தி வந்து k.k.s வீதியில் பண்டிக்கொட்டுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் தனது வாகனத்தை குறுக்காக விட்டு மடக்கிப் பிடித்தார்

பிரதானவீதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது எனினும் சம்பவிடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்துப்பொலிசார் மற்றும் குற்றத்தடுப்புப் பொலிசார் திருடர்களை கைது செய்து மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

வர்த்தகரின் துணிச்சல் மிகு செயற்பாட்டை பாராட்டிய மக்கள்.பழைய இரும்பு வியாபாரிகள் என்ற போர்வையில் திரியும் திருடர்கள் மீது விசனத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

“அதிரடி”க்காக -யாழ்அகரன்✍

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − six =

*