;
Athirady Tamil News

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதி வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

0

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை அவரது செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகபீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண மாணவர்கள் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. யாழ் இந்திய துணைத்தூரகத்தின் உதவியுடன் இதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தாரர்.

“வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு எம்மால் முடிந்த உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம். மாணவர் பரிமாற்றம் தொடர்பில் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்“ என்று தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 8 =

*