;
Athirady Tamil News

குஜராத் வனப்பகுதியில் 30 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட புலி..!!

0

குஜராத்தின் மகிசாகர் மாவட்டத்தின் போரியா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கடந்த பிப்ரவரி 6ம் தேதி இரவு, சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது புலி ஒன்று சாலையை கடந்ததை அறிந்தார்.

இதையடுத்து உடனடியாக தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. பின்னர் அப்பகுதி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மகிசாகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வன விலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இந்த கேமராக்களில் அந்த புலியின் உருவம் பதிவானது. இதனை ஆய்வு செய்த வனத்துறையினர், 30 வருடங்களுக்கு முன் வனத்தில் இருந்து காணாமல் போன புலி என அடையாளம் கண்டனர். இத்தகவலை வனத்துறை மந்திரி கணபதிட்சு வாசுவா உறுதி செய்துள்ளார்.

‘இந்த புலி கடைசியாக 1989ம் ஆண்டு குஜராத் வனப்பகுதியில் காணப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வனத்துறையினர் விலங்குகளை கணக்கெடுப்பது வழக்கமான ஒன்றாகும். இதன்படி புலி நடமாட்டம் ஏதும் இல்லாமல் இருந்தது.

தற்போது இந்த புலி அருகிலுள்ள ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எதாவது ஒரு மாநிலத்தில் இருந்து குஜராத் வந்திருக்கலாம்’ என்றும் வனத்துறை மந்திரி கூறினார்.

புலியின் உதிர்ந்த முடிகள், கால் தடங்கள் போன்றவற்றைக் கொண்டு அந்த பகுதியில் தொடர்ந்து உலாவுவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக வனப்பகுதிகளின் முதன்மை தலைமை ஆலோசகர் அக்‌ஷய் சக்சேனா கூறியுள்ளார். புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 12 =

*