;
Athirady Tamil News

வாகன விபத்துக்கான தவறுகளுக்காக அபராதம் அறவிடும் சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசு!!

0

வாகன விபத்துக்களுக்கு பாரியளவிலான தாக்கம் செலுத்தும் தவறுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அந்த தவறுகளுக்காக அபராதம் அறவிடும் சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அபராதத்தை அதிகரிப்பதற்காக இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை கவனத்திற்கொண்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையினால் குறித்த குழுவினால் வாகன விபத்துகளுக்கு பாரியளவிலான பத்து தவறுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இந்த தவறுகளுக்கான அபராதம் அறவிடும் சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*