;
Athirady Tamil News

வீடு புகுந்து தாக்கியதாகக் கூறி கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு!!!

0

கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணைத் தலைக்கவசத்தினால் தாக்கினார் குடும்பஸ்தர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

“கொடுத்த பணத்தை வாங்கச் சென்ற வேளை, தன்னை தலைக்கவசத்தினால் தாக்கிவிட்டு தனது கையைப் பிடித்து இழுத்துள்ளார்“ பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தப் பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வீடு புகுந்து தாக்கியதாகக் கூறி குறித்த குடும்பஸ்தரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 7 =

*