;
Athirady Tamil News

வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் கைது!!

0

கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில்வைத்திருந்த நபர் ஒருவரை பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்.உடுத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

அதன் போது ஒரு தொகை கசிப்பு , கட்டுத்துவக்கு மற்றும் வாள் என்பவற்றை வீட்டில் இருந்து பொலிசார் மீட்டனர். அத்துடன் வீட்டில் இருந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றில் பாரப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − ten =

*