;
Athirady Tamil News

மதிமுக பொதுக்குழு 6-ந்தேதி கூடுகிறது- வைகோ அறிவிப்பு..!!

0

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) கூடுகிறது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் களங்களைச் சந்திக்கும் அணுகுமுறை, கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

6-ம் தேதி காலை 10 மணி அளவில், நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். சென்னை அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் இந்த பொதுக்குழுகூடுகிறது.

இதில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழுவில் பங்கேற்க வருபவர்கள் அழைப்பிதழ்களை கொண்டு வரவேண்டும்.

கழக வரலாற்றில் நடைபெற இருக்கும் 27 -வது பொதுக்குழு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 19 =

*