;
Athirady Tamil News

அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப்போர்வை வழங்கினார்..!!

0

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 807-வது ‘உருஸ்’ கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.

அவ்வகையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளாக மலர்ப்போர்வைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு உருஸ் விழாவை முன்னிட்டு அஜ்மீர் தர்கா நிர்வாகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களிடம் தனது காணிக்கையாக மலர்ப்போர்வையை மோடி வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − three =

*