;
Athirady Tamil News

மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்த கும்பமேளா திருவிழா..!!

0

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழா நடைபெறும். இந்த கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் வருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். கும்பமேளா வரும் 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, நேற்று கும்பமேளா பதாகைகளை தாங்கி, 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் அணி வகுப்பு நடத்தின. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பமேளா நிர்வாக அமைப்பினர் செய்தனர்.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து அணிவகுப்பு 3.2 கிலோ மீட்டர் வரை நீண்டது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதற்கான கேடயமும் வழங்கப்பட்டது.

இதேபோல், 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட நீண்ட சுவர் போன்ற அமைப்பில், மக்களின் கை அச்சுகள் பதிக்கப்பட்ட பதாகைக்காக, கும்பமேளா நிர்வாக அமைப்பு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா தூய்மை பணிக்காக கும்பமேளா திருவிழா மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

கும்பமேளா திருவிழாவில் பங்கேற்ற ஏராளமானோர் பிரயாக்ராஜ் நகரின் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணிந்தும், கைகளில் துடைப்பதையும் ஏந்தியும் தெருக்களில் இறங்கி மகா தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதுவும் உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 14 =

*