;
Athirady Tamil News

இளவரசர் ஹரி செய்த காரியம்..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன்னுடைய மனைவி பற்றி இணையதளத்தில் வெளியாகும் சர்ச்சை கருத்துக்களை கவனிப்பதற்காக ரகசிய ட்விட்டர் பக்கம் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7 மாத கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன், விரைவில் தன்னுடைய கணவருடன் அரண்மனையை விட்டு வெளியேற உள்ளார்.

அரசு குடும்பத்தை சேர்ந்த குழந்தை போல் அல்லாமல், ஒரு சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த குழந்தையை போலவே தங்களுடைய குழந்தையையும் வளர்க்க தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

ஹரியை திருமணம் செய்துகொண்ட பின்னரே மேகனால் அரண்மனையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும், ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் ஒரு குற்றசாட்டு இருந்து வருகிறது.

இதனால் இணையதளவாசிகள் கடுமையாக மேகனை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவி குறித்து இணையதளவாசிகள் கூறும் கருத்துக்களை உற்றுநோக்குவதற்காக, இளவரசர் ஹரி ரகசியமாக ஒரு ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மேகன் ஒரு ரகசிய ட்விட்டர் கணக்கு வைத்திருந்ததாகவும், அதனை கிறிஸ்துமஸ் நேரத்தில் மூடியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 17 =

*