;
Athirady Tamil News

வவுனியாவில் ஆனந்த இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது!! (படங்கள்)

0

வவுனியா மணிபுரத்தில் உள்ள ஆனந்த இல்லமான பெண்கள் மனநலக்காப்பகத்தில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசனின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இல்ல முகாமையாளர் திருமதி ஜெயமலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சா. ஜீவசாந்தி தமிழ்விருட்சம் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

மனநலகாப்பகத்தில் உள்ளவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதேச சபை உப தலைவர் வெ.மகேந்திரன் எம்.ஜீ.ஆர் நற்பணி மன்றத்தின் சார்பில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுபா தர்சன், சபாநாதன், கவிஞர் மாணிக்கம் ஜெகன் , அந்தோணிஜயா, கஜபதி மற்றும் வைத்தியசாலை மனநலப்பிரிவினர் சமூக ஆர்வலர்கள் சிறார்களும் கலந்து சிறப்பித்தனர். வீ 3 பவுண்டேசன் ஊடாக கனடாவைச்சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் கணேசு சுதாகரன் சுஜிதா தம்பதிகள் இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தனர். பல்வேறு கலைநிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 5 =

*