;
Athirady Tamil News

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான்!! (படங்கள்)

0

ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம் வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி

‘சிறுநீரகம் காப்போம்’ எனும் ஜனாதிபதி செயலணியின் விஷேட செயற்றிட்டத்தின் பிரகாரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை ஸ்தாபித்து மக்கள் பாவனைக்காக வழங்கும் நிகழ்வுகள் வவுனியா மாவட்டத்தின் வீரபுரம், முதலியார்குளம் மற்றும் அறபா நகர் ஆகிய இடங்களில் இன்று இடம்பெற்றன.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே மேற்படி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை இதன் கட்டுமானப் பணிகளை செய்திருந்தது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட காதர் மஸ்தான் அவர்கள் நாடாவை வெட்டி மேற்படி நிலையங்களை திறந்து வைத்தார்.

மேற்படி ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்திட்டத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சமிந்த வாசல மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*