;
Athirady Tamil News

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா” துடுப்பாட்ட போட்டி முடிவு…! (படங்கள் இணைப்பு)

0

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா” துடுப்பாட்ட போட்டி முடிவு…! (படங்கள் இணைப்பு)

யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி, மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான “வீரர்களின் சமர்க்களம்” எனும் துடுப்பாட்ட போட்டி நேற்றையதினம் ஆரம்பமாகி இருந்தது நீங்கள் அறிந்ததே.

ஸ்கந்தவரோயா கல்லூரி அதிபர் திரு.எம்.செல்வஷ்தான் மற்றும் மகாஜனாக் கல்லூரி அதிபர் திரு.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு யாழ். பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் திரு.சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்த சிறப்பித்து இருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக பிரபல பௌதீக ஆசிரியர் திரு.எம்.குமரன், காப்பிடல் அல்லியன்ஸ் முகாமைத்துவாளர் திரு.பி.முகுந்தன் ஆகியோருடன் மாணவ மனைவிகள் மற்றும் பெருமளவில் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

நேற்றைய ஆட்டநேர முடிவில், முதலாவது இன்னிங்க்சில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 144 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்துள்ள அதேவேளை யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி, ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களுடன் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இருஅணிகளுமே சமநிலையில் முடிவுக்கு வந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

*** புகைப்பட உதவி “புளொட்” ஊடகப் பிரிவு..

யாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா” துடுப்பாட்ட போட்டி..! (படங்கள் இணைப்பு)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*