;
Athirady Tamil News

சூழகம் ஏற்பாட்டில், புங்குடுதீவு இராசேஸ்வரி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் துப்பரவு..! (படங்கள்)

0

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு இராசேஸ்வரி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டன. திரு.க.நாவலன் தனது மாதாந்த ஊதியத்தினை மேற்படி செயற்பாட்டிற்காக வழங்கியிருந்தார் .

-*** தகவல் & படங்கள்… -கருணாகரன் குணாளன் – செயலாளர் , சூழலியல் மேம்பாட்டு அமைவனம் (சூழகம்)

இதேவேளை பாடசாலை அதிபர் ஊடாக “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திடம்” முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, சுவிஸ் லீசில் வதியும் திரு.சதானந்தனின் சிறியதொரு நிதிப் பங்களிப்பில், புங்குடுதீவு திருமதி.சுலோசனாம்பிகை தலைமையில் மைதானம் துப்பரவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

*** தகவல்..- புங்குடுதீவு சத்துருக்கன். & படங்கள்..-திருமதி.சுலோசனாம்பிகை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 3 =

*