;
Athirady Tamil News

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது!!

0

அரசாங்க கருத்திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கருத்திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் உள்நாட்டுக் கட்டுமான நிறுவனங்களுடனோ உள்ளூர் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுடனோ கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதன்மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பத்தினை பெற்றுக் கொள்வதற்கு வசதியேற்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுர் கட்டுமான நிறுவனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − six =

*