;
Athirady Tamil News

இயன் வைத்திய பிரிவை மேம்படுத்த பைசல் காசிம் நடவடிக்கை!! (படங்கள்)

0

இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்ற இயன் மருத்துவ பிரிவுகளை வெளிநாட்டு நிதி உதவியின் மூலமாக நவீன உபகரணங்களை கொண்டு மேம்படுத்தும் நோக்கில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கும் அரச இயன்மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது நாடு முழுவதும் காணப்படுகின்ற இயன் மருத்துவ பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளும் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைகளும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இச்சந்திப்பில் கலந்துகொண்ட வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அரச இயன்மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் திரு தம்மிக்க கோரலாகே மிக நீண்ட காலத்தின் பின்னர் இப்போது இந்த விடயம்மீது சுகாதாரத் துறை சம்பந்தமான அமைச்சரின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கின்றமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இயன் வைத்திய பிரிவை மேம்படுத்தினால் இந்த நாட்டில் பெறுமதிமிக்க சேவையை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான வரைபுகளை உடனடியாக வழங்குமாறு பைசல் காசிம் மேற்படி சங்கப் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 10 =

*