;
Athirady Tamil News

ஒரு கோடி மதிப்பிலான தமிழக மீன் பிடி படகுகளை அரசுடமையா​க்க உத்தரவு!!

0

கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு நேற்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.

அப்போது படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகத காரணத்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி உத்திரவிட்டார்.

இதனிடையே நேற்றுநடைபெற்ற தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரத்தை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு படகுகளுக்கான விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரான படகு உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கின் தீர்ப்பை வரும் 14ம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*