;
Athirady Tamil News

மக்கள் விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் மஹிந்த விளக்கம்!!

0

மக்கள் விடுதலை முன்னணியுடன் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்று (06) இடம்பெற உள்ள சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தமது கடமையும் பொறுப்பு என அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பிரகாரம் இச்சந்திப்பு இடம்பெறுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் நாட்டிற்கு நன்மைபயக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 11 =

*