;
Athirady Tamil News

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான, அவசர மருந்துப் பொருட்கள் வழங்கிய “MSS அறக்கட்டளை”..! (படங்கள்)

0

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான, அவசர மருந்துப் பொருட்கள் வழங்கிய “MSS அறக்கட்டளை”..! (படங்கள்)

யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப் பொருட்கள் MSS அறக்கட்டளையினால் (புங்குடுதீவை சேர்ந்த மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டதே, MSS எனும் மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் அறக்கட்டளை) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப் பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து இன்றையதினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக் கொண்டார்கள்.

அறக்கட்டளையின் சார்பாக MSS இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா குமாரசாமி ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர். இந்த சமூக சேவையாளர்களுக்கும் இந்த அன்பளிப்புகளை வழங்கிய பின்வரும் கொடையாளிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்…

தவநாதன் விரகநாதன் வட்டுக்கோட்டை$500
சிவபாதம் கந்தையா காரைநகர் $250
சந்திரமோகன் நடராஜா நீர்கொழும்பு $250
கபிலன் கந்தையா வடலியடைப்பு $200
ஹரிகரன் தவநாதன் வட்டுக்கோட்டை $200
சதா நடா கந்தர்மடம் $100
விக்னேஸ்வரன்(யாக்கோ) $250
திருச்செல்வன் சிவசாமி புங்குடுதீவு $200
கதிர்காமு குடும்பம் புங்குடுதீவு $250
ரகு வல்லிபுரம் அரியாலை $200
சூரி மார்க்கண்டு இணுவில் $200
திலகன் கீர்த்திசிங்கம் புங்குடுதீவு $250
ஜெயானந்தன் பூதத்தம்பி புன்னாலைக்கட்டுவன் $200
லோகன் சுந்தரம் வேலணை $250
ஆனந்தராஜா விவேகானந்தசாமி
மாரீசன்கூடல் இளவாலை $200
கணேசரட்ணம். K அளவெட்டி $100

நன்றி

ஐயப்பன் ஆசியுடன்,
கனகலிங்கம் சின்னத்தம்பி
MSS நிறுவனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + five =

*