;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மேலும் 2 நாட்கள் வான்வழி தடம் மூடல்..!!

0

காஷ்மீர் மாநிலம் புல்வா மாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

இதனால் 2 நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஒருவருக்கு ஒருவர் கூறி வருகின்றனர். அதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான தனது வான்வழி தடத்தை மூடியது.

கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி முதல் நேற்று வரை வான்வழி தடம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான்வழி தடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும், நாளையும் (11-ந்தேதி) மேலும் 2 நாட்களுக்கு மூடப்படும். இருந்த போதிலும் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்கள் குறிப்பிட்ட விமானங்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மாலை 3 மணிக்கு வான்வழி தடம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வான் வழி தடம் மூடப்பட்டுள்ளதால் ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் பாகிஸ்தான் விமான நிலையங்களில் சிக்கித்தவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + six =

*