;
Athirady Tamil News

உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது!!

0

ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்த கூடிய தோட்டாக்களை பாவிக்கும் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான 24 தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) மதியம் 12 மணியளவில் மஹியங்கன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகொல்ல, அலுத்கெட்டியாவ பகுதியில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாப்பாகடவெவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + five =

*