;
Athirady Tamil News

செட்டிக்குளம் வேப்பன்குளம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு!! (படங்கள்)

0

1994ம் ஆண்டிற்கு பின் நேரியகுளம் மற்றும் வேப்பன்குளம் மக்கள் நீண்ட காலமாக நிரந்தர வீடு இன்றி பல கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு தீர்வாக நேற்றைய தினம் (9/3/2019) காலை 9.00 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக விட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இரு கிராமத்திலும் மிக சிறப்பாக நடைபெற்றது

இந் நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர் , பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள் வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன் , தியாகராஜா , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பயணாளிகள் , அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*