;
Athirady Tamil News

வவுனியாவில் கெரோயினுடன் முதியவர் கைது!!

0

வவுனியா ஓமந்தையில் கெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த போலிசார்… இன்றுமாலை ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கருகாமையில் கடமையில் இருந்த போலிசார் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அவரிடமிருந்து 45 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளை மீட்டனர். குறித்த 55 வயதான நபர் கைதுசெய்யபட்டதுடன்,அவர்பயணித்த மோட்டார்சைக்கிளையும் தமது கட்டுபாட்டில் எடுத்துசென்றுள்ளதாக தெரிவித்த போலிசார்.கைதுசெய்யபட்ட நபரை நாளைய தினம் நீதி மன்றில் ஆயர்படுத்த உள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 20 =

*