;
Athirady Tamil News

தேசிய குத்துச்சண்டையில் மிகக்குறைந்த வயதில் பதக்கம் வென்ற மாணவன்!! (படங்கள்)

0

தேசிய குத்துச்சண்டையில் வடமாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் பதக்கம் வென்ற மாணவன்!!

பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஆர்.கே.கெவின் என்ற மாணவன் வட மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் மார்ச் 08-09-10 ஆம் திகதிகளில் கண்டி மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிபலித்து 15 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்த நிலையில் வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவனான ஆர்.கே. கெவின் தனது 10 வது வயதில் குத்துச்சண்டையில் வெள்ளி பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

வடமாகாணத்தின் சிறந்த வூசூ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ். நந்தகுமாரின் வழிநடத்தலின் கீழ் 13 வயதினருக்கு உட்பட்ட 30 கிலேகிராம் எடைப்பிரிவில் வூசூ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு குறித்த மாணவன் வட மாகாணத்தில் மிகச் சிறிய வயதில் பதக்கத்தை சுவீகரித்து இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

தேசியரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் மிகக்குறைந்த வயதில் பதக்கத்தை வென்று தனது பாடசாலைக்கும், வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக பலரும் அம்மாணவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + sixteen =

*