;
Athirady Tamil News

ஆம் ஆத்மியிடம் சேரலாமா? – பொதுமக்கள் கருத்தை கேட்கும் ராகுல் காந்தி..!!

0

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது.

ஆனால் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். வேட்பாளர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் சார்பில் சில மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். பஞ்சாப், அரியானா உள்பட மேலும் சில மாநிலங்களிலும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை அந்த தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஆம்ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுடெல்லி மற்றும் சாந்தினிசவுக் உள்பட 3 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க இயலும் ஆம்ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளை மட்டுமே ஆம்ஆத்மிக்கு கொடுக்க பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இதை ஆம்ஆத்மி ஏற்குமா? என்பது தெரியவில்லை.

இதற்கிடையே டெல்லியில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரசுக்கு கொடுக்க புதிய சமரச திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசும், ஆம்ஆத்மியும் ஆலோசித்து வருகின்றன.

டெல்லியில் மே மாதம் 12-ந்தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த இறுதி வரை பேச்சு நடத்தி தொகுதி உடன்பாடு செய்து கொள்ள அவகாசம் இருக்கிறது.

இதனால் இரு கட்சி தலைவர்களும் நிதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் உள்ள பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் காங்கிரசின் திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மியுடன் சேர்ந்தால் நல்லதா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் முடிவுக்கு ஏற்ப ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? என்பது தீர்மானிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 6 =

*