;
Athirady Tamil News

தவிசாளர் ரவிகுழந்தைவேல் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு!!

0

சாஞ்சிமலை தோட்டபகுதியில் உள்ள ஊற்று நிரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் காரனமாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு

டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவூ 09ம் இலக்க மலையில் ஊற்றெடுக்கும் நிரினை மறைத்து டிக்கோயா பிலிங்பொனி தொழிற்சாலைக்கு நீரினை கொண்டு செல்லும் முயற்சியின் காரனமாக டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட முகாமையாளருக்கு எதிராக நோர்வூட்பிரதேசசரபயின் தவிசாளர் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் நோர்வூட் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவூ செய்துள்ளதாகவூம் குறித்த தோட்டநிருவாகமும் குறித்த களனிவெளி பெருந்தோட்ட நிறுவனமும் நோர்வூட் பிரதேசசபையில் எவ்வித அனுமதியினையூம் பெறவில்லையென தெரிவித்தே இந்த முறைபாட்டினை பதிவூ செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைபாட்டினை 13.03.2019 புதன்கிழமை மாலை பதிவூ செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் டிக்கோhய சாஞ்சிமலை மேல்பிரிவூ தோட்ட பகுதியில் ஊற்றெடுக்கின்ற குடி நீரினை குறித்த தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுவதால் குறித்த பகுதியில் விவசாயம் மேற்கொள்வோர் மற்றும் கால்நாடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கபட நேரிடும் இதனால் மக்கள் நாளாந்த அறுந்துவதற்கான குடி நீர் இல்லாமல் போய்விடும் போன்ற பலகாரனங்களை சுற்றிகாட்டியே இந்த முறைபாடு பதிவூ செய்யபட்ட தாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளல ரவிகுழந்தைவேல் தெரிவித்தார்.

13.03.2019 புதன்கிழமை குறித்த பகுதியில் ஆயிரத்துகும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு குறித்த திட்டத்தினை உடனடியாக
நிறுத்துமாறு வழியூருத்தியூம் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் களனிவெளி பெருந்தோட்ட நிருவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுரவீரகோன் ஆகியேருக்குயிடையில் கலந்தரையாடல் ஒன்று டிக்கோயா மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது இந்த கலந்துரையாடலின் போது குறித்த திட்டத்தின் ஊடாக பொதுமக்கள் பாதிக்கபடுகினர் உங்கள் நிறுவனத்தின் ஊடாக இந்தி நீரினை பெறவேண்டுமானால் கமநல தினைக்களத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் ஆனால் அந்த முறையினை தோட்ட கம்பனியினர் முன்னெடுக்கவில்லை ஆகையால் இந்த திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவூள்ளதாக நோர்வூட் பிரதேசசபையின்
தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது சாஞ்சிமலை தோட்டமுகாமையாளர், ரொப்கில் தோட்ட முகாமையாளர் தலைவர்மார்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 7 =

*