;
Athirady Tamil News

தமிழ் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு நடவடிக்கை!!

0

நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று அவர் சுட்டி காட்டினார். தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள குடியமர்வு புனர்வாழ்வு வட மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சிக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார்.

வரவு செலவு திட்ட குழு நிலை விவாதம் இன்று 2 ஆவது நாளாகவும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் பேசும் மக்களின் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன. யுத்தத்தினால் பொது மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்காக வீடுகள் கட்டப்பட வேண்டும் தற்பொழுது 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். வடக்கு கிழக்கு மக்களின் வீட்டு பிரச்சினைகளை மாத்திரமன்றி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

கடந்த 4 வருட கால பகுதியில் இராணுவத்திடம் இருந்த பெரும்பாலான காணிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த காணிகளில் பொது மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*