;
Athirady Tamil News

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் செயலமர்வு !! (படங்கள்)

0

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஆணையாளருமான மகிந்த தேசப்பிரிய அவர்கள் கொட்டகலை ஆசிரிய கலாசாலைக்கு வருகை இலங்கை தந்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் செயலமர்வு ஒன்றை 14.03.2019 நடாத்தினார். கலாசாலை முதல்வர் திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் பங்கு கொண்டதோடு ஆசிரிய மாணவர்களுக்கு இச் செயலமர்வு மிகவும் பயனுள்ள வகையில் அமையப்பெற்றது.

இதன் போது இலங்கை தேர்தல் ஆனைக்குழுவின் தலைவரும் ஆனையாளருமான மகிந்த தேசபிரிய அவர்களுக்கு மலர்சென்று வழங்கி வரவேற்கபடுவதையூம் உறையாற்றுவதையூம் மாணவர்களின் கலை நிகழ்சசிகளையூம் நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு தொகுதியினரையூம் படங்களில் கானலாம்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*