;
Athirady Tamil News

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொடுக்க முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது!!

0

வவுனியா சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொடுக்க முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது!!

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதி, சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 22வயது, 50வயதுடைய இருவரை இன்று (15) கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட சோதனையின்போது இரு சந்தேக நபர்கபளிடமிருந்தும் 80மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளினைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின்போது சந்தை சுற்றுவட்ட வீதியிலுள்ள சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை சோதனைக்குட்படுத்தியபோதே ஒருவரிடமிருந்து 50மில்லிக்கிராம் மற்றையவரிடமிருந்து 30மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை அவர்களது உடமையிலிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அருகிலுள்ள சிறைச்சாலைக்குள் இப்போதைப் பொருளினை வீசுவதற்காக இருவரும் சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*